ஏ.எஸ்.எம்.ஜாவித்-
வசந்தம் எப்.எம்.அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை ஏ.எம்.அஸ்கர் எழுதிய 'இந்த காலைப் பொழுது' கவிதை தொகுதி நூல் வெளியிட்டு விழா கடந்த சனிக்கிழமை (17) கொழும்பு தபால் திணைக்கள தலைமை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சிரேஷ்ட சட்டத்தரணியும், கவிஞருமான ஜி.இராஜகுலேந்திரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி முகாமையாளர் முருகேசு குலேந்திரன் முன்னிலை வகித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேஷன், இந்தியாவின் திரைப்பட இயக்குணர் மீரா கதிரவன், பாடலாசிரியரும், கவிஞருமான யுகபாரதி, திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் ஹஸீன், உலக அறிவிப்பாளர் டீ.ர்.அப்துல் ஹமீட், கவிஞர் அனார் ஆகியோர் கொளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
நூலின் முதல் பிரதியை புரவலர் புத்தக பூங்கா நிறுவுனர் இலக்கிய புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக் கொண்டார். ஏனைய சிறப்புப் பிரதிகளை அதிதிகளிடமிருந்து வரகை தந்தோர் பெற்று கொண்டதுடன் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளுக்கு நூராசிரியர் அஸ்கரினால் பிரதிகள் கையளிக்கப்பட்டன.



















