அகமட் எஸ்.முகைடீன்,ஹாசிப் யாஸீன்-
மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் ஞானசார தேரர்ஆகியோரின் இன நல்லுறவை சீர்குலைக்கும் நேற்றைய செயற்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.நாட்டில் இருப்பது பொது மகனுக்கொரு சட்டம் தேரருக்கு ஒரு சட்டம் அல்ல. தேரர்களுக்கு எதிராகஅரசாங்கம் உடன் சட்ட நடவடின்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது கண்டனஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக கடும் போக்குவாதிகளினால் மேற்கொள்ளப்படும் இனவாதநடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கண்டன அறிக்கையில் தெரிவிக்கையிலேயேவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல இனத்தவர்களும் இன நல்லுறவை பேணிவரும் நிலையில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்தொடர்ச்சியாக செயற்பட்டுவருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். நேற்றைய தினம் மிகவும்அநாகரீகமாக தமிழ், முஸ்லிம் மக்களை இனத்துவேச வார்த்தைகளால் திட்டித் தீர்;த்து மட்டக்களப்புவீதியில் பெரும் அட்டகாசம் புரிந்துள்ளார்.
அத்தோடு ஞானசார தேரர் வாகனப் பேரணியோடு மட்டக்களப்பு நகருக்குள் பிரவேசிக்க முற்பட்டிருந்தார்.மட்டக்களப்பு நகரில் உள்ள அமைதியை சீர்குலைப்பதற்கே இவர் முயற்;சித்திருந்தார். இந்நிலையில்ஞானசார தேரர் பொலிசார் முன்னிலையிலேயே நீதிமன்றத்தின் தீர்ப்பை கிழித்தெறிந்திருந்தார். ஆனால்பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
நாட்டில் இருப்பது பொதுமகனுக்கொரு சட்டம் தேரருக்கு ஒரு சட்டம் அல்ல. எல்லோருக்கும்ஒருவிதமான சட்டமே காணப்படுகிறது. எனவே பொலிஸார் தேரர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
பெரும்பான்மை கடும் போக்குவாதிகளினால் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கெதிராகமேற்கொள்ளப்படும் இன ரீதியான அச்சுறுத்தல் மற்றும் அடக்கு முறைகளை கண்டும் காணாமலும்இருக்க முடியாது. இன நல்லுறுவை பேணிப் பாதுகாப்பதற்காகவே நாட்டில் நல்லாட்சியை சிறுபான்மைமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள்கொண்டுள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்யாது கடும் போக்குவாதிகளுக்கு எதிராக அரசாங்கம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுபான்மை மக்கள் இச்சந்தர்ப்பத்தில் அமைதிகாத்து செயற்பட்டமை பாராட்டத்தக்கதாகும். இவ்வாறானசந்தர்ப்பங்களில் சிறுபான்மை சமூகத்தினர் பொறுமையுடன் செயற்பட வேண்டும். அத்தோடுமுஸ்லிம்கள் தமது ஐவேளை தொழுகையின் போதும் நாட்டின் சுமுகநிலை ஏற்படுவதற்குபிரார்த்திக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.
எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பையும் மதச் சுதந்திரத்தையும் நல்லாட்சி அரசாங்கம்உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
