நிந்தவூரில் 84 பேருக்கு டெங்கு நோய் - 57பேரிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

சுலைமான் றாபி-
நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரைக்கும் 84 பேருக்கு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ( 04) கல்முனை சுகாதாரசேவைகள் பனிமனை, நிந்தவூர் பிரதேச செயலகம், நிந்தவூர் பிரதேச சபை ஆகியன இணைந்து நடாத்திய டெங்கு தொடர்பான விஷேட வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களாக 57இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, அந்த இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக நிந்தவூர் 04,05 மற்றும் 19ம் பிரிவுகளிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பராமரிப்பாரற்ற நிலையில் காணப்படும் கட்டிடங்களிலும் டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -