யாழ் சாவகச்சேரி கொடூர விபத்தில் பலியாகியவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகின.!

யாழ் சாவகச்சேரி கொடூர விபத்தில் பலியாகியவர்களின் பெயர் விபரங்கள் இதோ யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை ஏ-9 வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஹையஸ் வாகனம் எதிரில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்தனர்.

புத்தளம் மாதம்பை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவுக்கு வந்தவர்களில் 6 ஆண்களும் 5 பெண்களுமே இந்த விபத்தில் பலியாகினர்.

பலியானவர்களிலில் சிலாபம் மதுறகம பகுதியைச் சேர்ந்த குணரட்ண, டபிள்யு.கே. இந்திரரட்ண, லகிறு மகிசங்க, எம்.ஏ.ஏ.குணசேன, குணசிறி, லயிறுமதுசங்க, குசாரட்ண மாதம்பை, பெரேரா, சுமணாவதி, தயாவதி, நந்தாவதி.

பஸ்ஸில் காயமடைந்தவர்கள்.

2 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜெ.சுகந்தினி (வயது-18), 2 ஆம் வட்டாரம் புதுக்குடிருப்பைச் சேர்ந்த ஜே.செல்வமேரி (வயது-5) , சூசைப்பிள்ளை குளம் வவுனியாவைச் சேர்ந்த நே.சங்கீதா (வயது-24) தவசிகுளம் மிசுருவிலைச் சேர்ந்த செ.கெளிவேல் (வயது-28), அச்சுவேலி பி.சிவறஞ்சினி, மானிப்பாயைச் சேர்ந்த ஞானசேகரம் துசானா (வயது-14), ஏ.நந்தினி (வயது-52), மருதநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த கணேசமூர்த்தி குவாஜினி (வயது-23), சின்னம்பன் நெடுங்கேணியைச் சேர்ந்த த.யோகராணி (வயது-63), ஜெகதீஸ்வரன் ,சுமண சோபா , றெஜினா (வயது-46) ஆகியோரே காயமடைந்தவர்களாவார்.

இவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -