ஜா-ஹெல பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலால் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் மூலமாக நண்பர்களான குழுவொன்று கடந்த தினத்தில் விசேட விருந்துபசாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு நுழைவு கட்டணமாக 1500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த கலால் அதிகாரிகளினால் குறித்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
