அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை.மொறவெவ பிரசேத்தில் மீனவர்களின் நலன் கருதி மீனவர் இழைப்பாறும் புதிய கட்டிடத்தினை பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசன்த புஞ்சிநிலமே இன்று (13) காலை திறந்து வைத்தார்.
மொறவெவ மீனவர் சங்கத்திற்கு அவரது பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட இக்கட்டிடம் குணவர்தன புர பகுதியில் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தை திறந்து வைத்து மீனவர்களுக்கு உரையாற்றும் போது தான் மீன்பிடி பிரதியமைச்சராக இருந்த காலப்பகுதியில் அதிகளவில் குளங்களில் மீன் குஞ்சுகளை பெருகச்செய்ததுடன் கஷ்டமான வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த மீனவர்களுக்கு தோணி மற்றும் மீன் பிடி வலைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை மொறவெவ பிரதேசத்தில் கூடுதலான வீடுகளுக்குறிய மலசல கூடத்திற்கு பின்னால் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் சிவப்பு கல் போடப்பட்டுள்ளதாக பொது மக்கள் முறைப்பாடு செய்வதாகவும் அதிலும் ரொட்டவெவ பகுதியில் மக்கள் வாழும் பிரதேசத்திற்குள் கல் போடப்பட்டுள்ளதாகவும் அக்கல்லை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் யானை மின்வேலிகள் சில இடங்களில் காடுகளை சுற்றி போடப்பட்டுள்ளதால் யானைகள் கிராமத்துக்குள் வருகை தருவதாகவும் அவ்வாறான செயற்பாட்டினை கூடிய கவனம் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இதன் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீன்பிடி திணைக்களத்தின் உயரதிகாரிகளும்.மற்றும் முன்னாள் பிரதேச சபை தலைவருமான டபிள்யூ.ஆர்.றம்பண்டா -கிராம சங்க நிர்வாகிகள்.மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


