இன்று தமிழக அரசியலில் கருப்பு தினம் என கூறினால் அது மிகையாகாது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் பல தரப்பினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இந்த வேளையில் ஜெயலலிதாவின் சடலம் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அவர் சடலம் அருகே அவர் தோழி சசிகலா கண்ணீருடன் அமர்ந்துள்ளார்.
மேலும் ஜெயலலிதாவில் சடலத்தை சுற்றி சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களே தற்போது அமர்ந்துள்ளனர். 59 வயதான சசிகலாவை பற்றி கூறவேண்டுமானால் ஜெயலலிதாவுடன் அவர் நட்பானது 1980 ஆண்டுகள் நடுவில் தான்.
சசிகலா எந்த்வொரு அரசு பதவியையை ஏற்காதவராயினும் திரை மறைவில் மிக பலமுள்ள மனிதராகவே அதிமுகவினரால் பார்க்கப்பட்டார். ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள் வரை அவர் உடனே இருந்த சசிகலா அவர் நிழலாகவே வலம் வந்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஓ.பன்னீர்செல்வம், ஷீலா பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து சசிகலா தான் பல முக்கிய அரசு சார்ந்த முடிவுகளை எடுத்தார் என கூறப்பட்டது. அதே போல ஊழல், சொத்து குவிப்பு வழக்குகளில் சிக்கி தண்டனையும் சசிகலா பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஜெயலலிதா வகித்து வந்த கட்சி பொது செயலாளர் பதவி அடுத்து சசிகலாவுக்குத்தான் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
கடந்த 2011 ஆண்டில் ஏற்ப்பட்ட மனகசப்பில் சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன் அவரின் உறவினர்கள் டி.டி.வி தினகரன், வி.என். சுதாகரன், வி.பாஸ்கரன், வி.கே.திவாகர், வி.மகாதேவன், வி.தங்கமணி, டாக்டர் வெங்கடேஷ் என 13 பேரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா. பின்னர் அவர்கள் எல்லாம் ஜெயலலிதாவால் மன்னிக்கப்பட்டு மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டனர்.
இப்போது ஜெயலலிதா மறைவால் துரேகிகள் கை மீண்டும் ஓங்கி விடுமோ என அதிமுக நிர்வாகிகள் அஞ்சுகின்றனர்.
இது பற்றி அதிமுக நிர்வாகிகள் கூறுகையில்,
தற்போது ஜெயலலிதா சடலத்தின் அருகில் சசிகலாவும் அவர் சார்ந்த குடும்ப ஆட்களும்தான் இருக்கிறார்கள். முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செலவம், மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஜெயலலிதா உடலுக்கு கீழே படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா உடலைச் சுற்றி துரோகிகள் அதிகளவில் இருக்கிறார்களே என அவர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவுக்கு 113.73 கோடி சொத்துக்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இந்தியா டுடே தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா சொத்து சசிகலாவுக்கும், போயஸ் கார்டன் இல்லம் இளவரசியின் மகன் விவேக்கிற்கும் செல்ல உள்ளதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
