அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. மஹாதிவுல்வெவ சிங்கள மஹா வித்தியாலயத்தில் 06ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் குளிர் தாங்க முடியாமல் மயக்கமுற்ற நிலையில் இன்று (01) காலை மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் மொறவெவ- 06ம் வட்டாரத்தைச்சேர்ந்த எம்.கே.ஜி.ஹஸான் (10 வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த மாணவன் வழமை போல் இன்று பாடசாலைக்கு வருகை தந்த போது வகுப்பில் குளிர் என கூறிக்கொண்டு இருந்ததாகவும் அதனையடுத்து சிறிது நேரத்தின் பின்னர் மயக்கமுற்றதாகவும் தெரியவருகின்றது.
சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்த வண்ணம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
