நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் போசாக்கு நிகழ்ச்சி திட்டம்

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-

னாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் பல்துறைசார் போசாக்கு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தினால் “இயற்கையுடன் இணைவோம் ஆரோக்கியம் பெறுவோம்” எனும் கருப்பொருளில் 26.11.2016ம் திகதி ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் பயிற்சி வழிகாட்டல் செயலமர்வு இடம்பெற்றது.

இப்பயிற்சி செயலமர்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 30 முன்பள்ளிகளின் 2 ஆசிரியர்கள், ஆர்வமுள்ள 2 பிள்ளைகளும் அவர்களின் பெற்றோர்கள் என 180 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சிறுவர் பராமரிப்புப்பிரிவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகளும், ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட ஆரம்பப்பிரிவு பாடசாலை அதிபர்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

நாவலடி வைத்திய பொறுப்பதிகாரி எம். றிகாஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய காலாநிதி திருமதி இ. ஸ்ரீதர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், ஏனைய அதிதிகளாக சுதேச மருத்துவ திணைக்களத்தின் Focal point உம், பேத்தாளை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி எஸ். குமுதினி, ஓட்டமாவடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி ஏ. நளீம்தீன் அவர்களும், வாகரை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி என்.எம். நிம்சாத் அவர்களும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் எச்.எம். ஜெமிலுனிஷா உட்பட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகளும் கலந்து சிறப்பித்ததுடன், இப்பயிற்சி வகுப்பை மாறி வரும் உணவுப்பழக்க வழக்கங்களும், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளும் எனும் தலைப்பில் விரிவுரையை கைதடி போதான வைத்தியசாலையின் வைத்தியர் டி. திலீபன் அவர்கள் மேற்கொண்டார். மேலும் இந்நிகழ்வில், கலந்து கொண்டோருக்கு இலைக்கஞ்சியை வீட்டில் தயாரிப்பதற்கான வழிமுறைகளும், அதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் அவர்களினால் விரிவுரை மூலம் தெளிவுபடுத்தப்பட்டது. 

இயற்கை வள உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் தொடர்பிலும் விரிவுரை மேற்கொள்ளப்பட்டதுடன், நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சிறார்களுக்கான விஷேடமாக சிறார் பாடலுடன் கூடிய விரிவுரை நடைபெற்றது. கலந்து கொண்டோர்களுக்கு விஷேடமாக இலைக்கஞ்சி தயாரிக்கப்பட்டு, பரிமாறப்பட்டதுடன், வெவ்வேறு அசாதாரண சூழ்நிலைகளில் உபயோகிக்கப்படக்கூடிய கீரை வகைகள் மற்றும் இலைக்கஞ்சி தயாரிப்பு முறைக்கான துண்டுப்பிரசுரம் கலந்து கொண்டவர்களுக்கும் முன்பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்களுக்குமாக ஒவ்வொரு முன்பள்ளிக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -