ஏ.எல்.எம்.ஷினாஸ்
மருதமுனை - பெரியநீலாவணை வீ.சி வீதியில் (08.12 2016) ஏற்பட்ட வீதி விபத்தில் எம்.என்.அஸ்ரிப் (3 வயது) சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
பெரியநீலாவணை வீ.சி.வீதியில் உள்ள தனது தாயின் சகோதரியின் வீட்டுக்கு சென்ற சிறுவன், அங்கிருந்த குறுக்கு ஒழுங்கையிலிருந்து பிரதான வீதியை நோக்கி விரைந்து வந்தபோது பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் மோதுண்டு ஸ்தலத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான கனரக வாகனம் சாய்ந்தந்தமருது பிரதேசத்தை சேர்ந்தது எனவும் சாரதி கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று கைதானதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
செய்தி எழுதும் வரை (09.12.2016) காலை11.00 மணி ஜனாஸா உறவினர்களிடத்தில் கையளிக்கப்படவில்லை.
பிரேத பரிசோதனை நடாத்தி வைத்திய அறிக்கையை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் (08.12.2016)மாலை 5.00 மணிக்கு பின்னரே கல்முனையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக ஜனாஸா அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
