22 வயதான குறித்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு, "அல்லாஹ் மிகப் பெரியவன், சிரியாவை மறந்துவிடாதீர்கள், அலப்போவை மறந்துவிடாதீர்கள்" என சத்தமாக கத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கியர்களின் பார்வையில் ரஷ்யா எனும் தலைப்பின் கீழ் இடம்பெற்ற சித்திர கண்காட்சியில் பங்குபற்றி, உரையாற்றிய காலோவ் மீது குறித்த நபர் 8 முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த நபர் அந்நாட்டு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவின் அலப்போ நகரில் இடம்பெறும் ரஷ்யா மற்றும் துருக்கி ஆகியன இணைந்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்தியவர் அங்காராவைச் சேர்ந்த கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.