அக்கரைப்பற்று ஆலங்குளம் வீதியில் தீகவாபி சந்தியில் வைத்து காடையர்களால் தாக்கப்பட்ட வாங்காமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய கற்கை நெறிக்கான இரண்டாம் ஆண்டு மாணவன் தென்கிழக்கு பல்கலைக்கழகம் அப்துல் ரவூப் இம்ரான் இன்று அம்பாரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இவரைத் தாக்கியவர்களை பொலிசாரிடம் அடையாளம் காட்டியும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தமன பொலிசார் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாங்காமம் பிரபிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவர் தந்தையை இழந்த ஓர் மாணவனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரைத் தாக்கியவர்களே முன்னால் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் அப்துல் கபூர் அஸ்மி உள்ளிட்ட ஏனையோரையும் தாக்கியவர்களாவர். புகைப்படம் கீழே ஆதாரமாக இணைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என வாங்காம மக்கள் கோருகின்றானர்.



