சரீப்தீன் சியான்-
1975-03-06 ம் திகதி பிறந்த SMB ஆசாத் தனது ஆரம்பப்படிப்பை கிழக்கு அரசினர்
கலவன் பாடசாலையில் ஆரம்பித்த அவர் கல்வியோடு இனைந்து விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட அவரை அப்பாடசாலையின் விளையாட்டுப் பொருப்பாசிரியர் உரிய பயிச்சிகள் வழங்கியதால் பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மற்றும் தேசிய போட்டி நிகழ்வில் உயரம் பாய்தலில் வெற்றியீட்டி அப்பாடசாலைக்கும் ஒலுவில் மன்னுக்கும் பெருமை சேர்த்தார்.
தொடர்ந்தும் தனது உயர்தரப் படிப்பை தான் பிறந்த மண்ணான ஒலுவில் அல்/ ஹம்றா மகா வித்தியாலயத்தில் தொடர்ந்த அவர் அதனையும் வெற்றிகரமாக நிறைவு செய்து சித்திபெற்றார். பின்னர் 2000ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் சித்தி பெற்று 10 வருடங்கள் விளையாட்டு உத்தியோகத்தராக சேவையாற்றிய அவர் பின்பு 2011ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கரப்பந்து மற்றும் கராத்தே பயிற்சிவிப்பாளராக தரம் உயர்த்தப்பட்டார்.
பின்பு 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் இருந்த உடற்கல்வி போதன ஆசிரியருக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக நடைபெற்ற நேர்முகப்பரீச்சைக்கு முகம் கொடுத்து அதில் தெரிவு செய்யப்பட்டு தற்போது கடமையாற்றிக் கொண்டிருக்கும் அவருக்கு 2016 செப்டம்பர் மாதம் சீனா HENAN பல்கலைக்கழகம் சென்று தனது உடற்கல்வித்துறையில் முதுமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் கிடைக்கப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது உடற்கல்வித்துறை முதுமானிப் பட்டப்படிப்பிற்காக சீனா HENAN பல்கலைக்கழகத்தில் இனைந்து கொண்டார்.
இதில் விஷேட அம்சம் என்னவெனில் சீனா HENAN பல்கலைக் கழகத்திற்கு முதுமானி பட்டப்படிப்பிற்காக சென்ற மாவட்டத்தின் முதலாவது மாணவன் என்ற பெருமையும் SMB.ஆசாத் அவருக்கே சாரும்.
