கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள சமூக சேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் கலாசார பிரிவின் வேண்டுகோளுக்கமைவாக கல்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-இஹ்ஸான் இஸ்லாமிய சமூக சேவை நிறுவனத்தினால் மத்ரஸாக்களுக்கு 2016.12.05ஆந்திகதி - திங்கட்கிழமை) அல்-குர்ஆன் வழங்கி வைக்கப்பட்டது.
207 - மாஞ்சோலை கிராம சேவையாளர் பிரிவிலுள்ள அர்-ரஹ்மான் மற்றும் நூருல் ஹுதா ஆகிய இரு குர்ஆன் மத்ரஸாக்களிலுமுள்ள 40 பிள்ளைகளுக்கு இன்று 30 தூஸ் அல்-குர்ஆன் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அல்-இஹ்ஸான் இஸ்லாமிய சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி ஏ.எல். நவாஸ், கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எம்.ரீ. ஹைதர் அலி, கல்விப்பிரிவின் தலைவர் ஏ.எம். பிர்னாஸ் ஆசிரியர் ஊடக இணைப்பாளர் எஸ்.எச். உஸைத் மற்றும் கலாசார பிரிவின் தலைவர் எஸ்.எம். சிம்ஸான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




