ஆனால் அவர் இன்று சந்தர்ப்பவாதமாகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கல்முனை மாநகர முன்னாள் பிரதி மேயரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான முழக்கம் மஜீட் இணைய தொலைக்காட்சியான வியூகம் தொலைக்காட்சியில் சமகால அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துக் கூறும்போது தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்வியான கரையோர மாவட்டத்தின் கோரிக்கையை நிறுத்தி விட்டீர்களா..? என்ற கேள்விக்கு பதில் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவரது கருத்தில் கூறியதாவது:
கரையோர மாவட்டம் கட்டாயம் வேண்டும் அது கல்முனையை தலைமையகமாகக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்தபோது கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கடுமையாக எதிர்த்தார்.
இன்று கரையோர மாவட்டத்துக்கான தேவையில்லை என்று கூறினார். ஆனால் இன்று மாற்றமான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
சாய்ந்தமருது தோணா தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது:
இன்று அதனுடைய வேலைகள் ஆரம்பமாகியிருக்கிறது ஆனால் மூன்றாண்டுகளுக்குள் அதனை முழுமையாக செய்து முடிக்கப்படும் என்று கூறினார். முன்னாள் கல்முனை பிரதி மேயர் முழக்கம் மஜீட்.
