வட மாகாண இயற்கைப் பேரிடர் தணிப்பு தினம் அனுஸ்டிப்பு- படங்கள் இணைப்பு

சிவனேசன் -
ட மாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினம் இன்று(26.12.2016) திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் செம்மலைiயில் நினைவுகூரப்பட்டது.

வட மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்

பிரதம அதிதியாக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன்,

வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலரஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி என்பன இடம்பெற்றன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -