பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாண பொதுநூலகத்திற்குள் நுழைந்த மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் அங்கிருந்த உடைமைகளை சேதப்படுத்தி ஊழியர்களையும் தாக்க முற்பட்டுள்ளார்.
நேற்று மாலை 5 மணியளவில் நூலகத்திற்குள் நுழைந்து குறித்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர் நூலகத்தில் இருந்த புத்தகங்களை எடுத்து எறிந்து அட்டகாசம் செய்ததுடன் நூலகத்திற்கு சொந்தமான உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளார்.
அத்துடன் இவரது செயற்பாட்டை தடுக்க முற்பட்ட நூலக ஊழியர்களையும் தடி ஒன்றினால் தாக்கியுள்ளார்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன் நூலகத்தில் இருந்த வாசகர்கள் சிதறி ஓடினர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் பொலிசார் குறித்த நபரினை பெரும் சிரமங்களுக்கு மத்தியல் கைது செய்து அழைத்து சென்றனர்.

