கிண்ணியா துறையில் அனுமதி பெறப்படாமல் நிர்மாணிக்கப்படும் வரும் சிலை நிர்மாணத்தை இடைநிறுத்த பணிப்பு


கிண்ணியாத் துறையடியில் அனுமதியற்ற நிலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சிலை நிர்மாணத்தை உடன் இடைநிறுத்துமாறு திருகொணமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.பு~;பகுமார பிரதி பொலிஸ் மா அதிரைக் கேட்டுக் கொண்டார்.

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (இன்று) வியாழக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அதன் போதே அரசாங்க அதிபர் பிரதிபொலிஸ் மாஅதிபருக்கு இடைநிறுத்தும் அறிவித்தலை விடுத்தார்.

இந்த நல்லாட்சி காலத்தில் அனுமதி பெறப்படாமல் நிர்மாணப் பணிகள் இடம்பெறுகின்றமை பெருங் கவலையை அளிக்கின்றது. இது குறித்து நான் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் பொலிசாருக்கு அறிவித்தும் நிர்மாணப் பணிகள் தொடர்கின்றன. இது நல்லாட்சிக்கு அழகல்ல.
கிண்ணியா வரவேற்புத் தூண் எவ்வித கலாசாரத்தையும் பிரதிபலிக்காது நிர்மாணிக்கப்பட வேண்டும் என இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தான் தீர்மானித்தது. அதன்படியே அந்த நிர்மாணப் பணிகள் நடந்தன. ஆனால் அந்த வரவேற்புத் தூணுக்கு சிறிது தூரத்தில் எவ்வித அனுமதியும் இன்றி இந்த நிர்மாணப்பணி இடம்பெறுவது நீதியானதல்ல
இது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒதுக்குப் பகுதி அந்த அதிகாரசபைக்கே தெரியாமல் தான் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகின்றது என்றும் இம்ரான் எம்.பி இதன் போது மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்;வர் ஆகியோரும் இது விடயத்தில் கருத்துக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -