கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா மாணவர்கள் பாராளுமன்றம் விஜயம்

கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியினை பயின்றுவரும் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன் தலைமையில் பாராளுமன்றம், அதனுடைய நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியாளர்களின் செயல்பாடுகள் தொடர்பிலான விடயங்களை அறியும் முகமாக நேற்று (10) சனிக்கிழமை காலை பாராளுமன்றத்திற்கான விஜயம் ஒன்றினை மேற் கொண்டிருந்தனர்.

இவ்விஜயத்திற்கான சகல ஏற்பாடுகளையும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருகை விருவுரையாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன் மேற் கொண்டிருந்தார்.

சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருகை விருவுரையாளராக இருந்து Parliamentary Reports & Investigative journalism என்ற பாடநெறியினூடாக பல ஆண்டுகள் விரிவுரையாளராக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாராளுமன்ற சபை அமர்வு, விவாதங்கள், வாக்களிப்பு மற்றும் அதன் நடவடிக்கைகள் தொடர்பாகவும், அச்சு, இலத்திரணியல் ஊடகங்கள், தொலை காட்சி நிறுவணங்கள் பாராளுமன்றத்தில் இருந்தவாறு எவ்வாறு தொழில்படுகின்றன என்பன போன்ற விடயங்கள் மாணவர்களுக்கு நேரடியாக காண்பிக்கப்பட்டதுடன் அது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டன.

மேலும் 1950களில் சிறைக்கைதிகளால் உருவாக்கி அன்பளிப்பு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ள பழமை வாய்ந்த சபாநாயகர் கதிரை மற்றும் படைசேவகனின் பழமை வாய்ந்த தலைக்கவசம், தாய்நாட்டிக்காக தன்னை அர்ப்பனித்து பணியாற்றிய தலைவர்களின் நினைவு முத்திரைகள் உள்ளிட்ட பல விடயங்களை காண்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த சிறுபான்மை இனத்தை சேர்ந்த தமிழ் பேசும் பல்கலைகழக மாணவர்களின் பாராளுமன்ற விஜயத்தின் போது எதிர்கட்சி மற்றும் ஆளும் தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மாணவர்களுடன் பேசி, உறவாடி தங்கள் மகிழ்சியையும், வாழ்துக்களையும் இதன் போது தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.திலகராஜ் மற்றும் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர்களினால் பகல்போச ஏற்பாடு ஒழுங்கு செய்யப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பாராளுமன்றக் கட்டிட தொகுதியில் அமைந்துள்ள குழு அறை 02இல், சமகால அரசியல், அரசியல் யாப்பு சீர்திருத்தம் மற்றும் தற்பொழுது நாட்டில் சிறுபான்மையினங்களுக்காக நடைபெறுகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

பிற்பகல் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபையின் அமைச்சருமான றவூப்ஹக்கீம், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், எம்.எஸ்.தௌபீக், அலிசாஹிர் மௌலானா ,மன்சூர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்றக் கட்டிடத்தில் தொகுதியில் அமைந்துள்ள குழு அறை 02இல், சமகால அரசியல், அரசியல் யாப்பு சீர்திருத்தம் மற்றும் தற்பொழுது நாட்டில் சிறுபான்மையினங்களுக்காக நடைபெறுகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், எம்.எஸ்.தௌபீக், அலிசாஹிர் மௌலானா மற்றும் மன்சூர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சனிக்கிழமை (10) பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத்தில் தொகுதியில் அமைந்துள்ள குழு அறை 02இல், சமகால அரசியல், அரசியல் யாப்பு சீர்திருத்தம் மற்றும் தற்பொழுது நாட்டில் சிறுபான்மையினங்களுக்காக நடைபெறுகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், எம்.எஸ்.தௌபீக், அலிசாஹிர் மௌலானா மற்றும் மன்சூர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.சாஜில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -