திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் ஒருவரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா இன்று ஞாயிற்றுக்கிழமை (11) உத்தரவிட்டார். கந்தளாய், வாத்தியாகம பகுதியைச் 34 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நகை வியாபாரம் மேற்கொள்வதற்காக வேண்டி நபர் ஒருவரிடம் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தினை கடனாக பெற்று அப்பணத்தினை பின்பு தருவதாக குறித்த சந்தேகநபர் அப்பணத்தொகையினை வழங்காது தலைமரைவாக இருந்த நிலையிலே பணஉரிமையாளர் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று சனிக்கிழமை (10) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை இன்று(11) கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
