தீ வைத்த கடல்..!

தீ வைத்த கடல்..!!
**********************************

தேடிப் போய்ப் பார்த்துப் பழகிய கடல்..
வங்காள விரிகுடாவில் இருந்து..
வளமைக்கு மாற்றாக எமை..
தேடி வந்த வேளை..!!

தூரமாய் ஓட நினைத்தோம் ஆனால்..
துரத்திப் பிடித்து உயிர்களைக் குடித்தது..
தூக்கத்தில் இருக்கும் எமை..
துயில் விட்டு எழ வைக்கிறது..!!

தீ வைத்த கடல் அலையினால்..
நீருக்கு உள்ளேயே..
தீக்குளித்தென உடல்கள்..
திக்குத்திசை மாறிப் போய்..!!

திரண்டு வந்த கடலைக் கண்டு..
திடல் தேடி விரண்டு ஓடினோம்..
திடலாய்ப் போய்க் கிடந்தன ஊர்கள்..
தீப்பற்றிக் கொண்ட வனமாய்..!!

துர்ப்பாக்கிய சாலிகளாய்..
துடி துடிக்க உயிர் போனது இன்றும்..
துருப் பிடித்த இரும்பாக..
துப்பரவு செய்ய முடியாமல் இருக்கிறது..!!

**********************************
இவள்-
கலாரசிகை நிலாமகள்: செ. பாத்திமா றிப்னா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -