வலயமட்டத்தில் தங்கவிருது பெற்ற சம்மாந்துறை நாவிதன்வெளி 7ஆம் கிராமம் கணேசா
வித்தியாலயம் தேசியவிருது பெற்றது. நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தாமரைத்தடாகத்தில் நடைபெற்ற விழாவில் இப்பாடசாலைக்க விசேட பரிசுகள்
சான்றிதழ்கள் வழங்கிக்கௌரவித்தார்.
சிறந்த சுகாதார க்கழக மேம்பாட்டுக்கான பாடசாலைகளில சிறந்த பாடசாலையாக
இப்பாடசாலை தெரிவுசெய்யப்பட்டது.*
*சம்மாந்துறை கல்வி வலயத்தில் மிகவும் பின்தங்கிய 7 ம் கிராமம் கணேசா
வித்தியாலயத்திற்கு தேசிய விருது கிழடத்தது. கடந்த 28.11.2016 ஆம் திகதி
கொழும்பு தாமரை தடாகத்தில் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன
அவர்களினால் வித்தியாலய அதிபர் பொ. பாரதிதாசன் அவர்களிடம் இவ் விருது வழங்கி
கௌரவிக்கப்பட்டது.*
*கடந்த வருடம் வலயமட்டத்தில் தங்க விருது பெற்ற சுகாதரா மேம்பாட்டுக்கான
பாடசாலைகளில் தேசிய விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வுகளிலேயே இப் பாடசாலை
தெரிவு செய்யப்பட்டு இவ் விருது வழங்கப்பட்டது.*
*இதன்போது வித்தியாலய அதிபருடன் சுகாதார கழகத்திற்கு பொறுப்பான எம்.
மகாலிங்கம் ஆசிரியர் சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை இணைப்பாளர் ஜனாப்
ஐ.எல்.எம் அலியார் மற்றும் பாடசாலை சுகாதார கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.*
*இவ்விருதைப்பெற்று வலயத்திற்கு பெருமைசேர்த்தமைக்காக வலயக்கல்விப்பணிப்பாளர்
எம்.எஸ்.சஹதுல்நஜீம் வாழ்த்துக்ளைத் தெரிவித்தார்.*
