மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர அபிவிருத்தி நீர் வழங்கள் அமைச்சர் றவூப் ஹக்கிம் அவர்களின் 27மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் விஸ்த்தரிப்பு வேலைகள் (19.12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன் இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்களும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் என். சசி நந்தன் ஆகியோர் உற்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கார்பட் வீதியாக அமைக்கப்படவுள்ள இவ்வீதக்கான முதற்கட்ட விஸ்த்தரிப்பு பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.


