காரைதீவு நிருபர் சகா-
இந்தியாவின் தமிழகம் மற்றும் இலங்கை தமிழ்எழுத்தாளர்களின் 22நூல்களின் வெளியீட்டுவிழாவும் விற்பனையும் நாளை 11ஆம் திகதி ஞாயிறன்று மாலை 4மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் கம்பன்கழகத்தலைவர் தெ.ஈஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
மணிமேகலைப்பிரசுரத்தின் இவ் 22 நூல்களின் வெளியீட்டுவிழாவிற்கு சிங்கப்பூர் துபாய் இந்தியாவிலிருந்து எழுத்தாளர்கள் பலர் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
இலங்கை எழுத்தாளர்களுள் கிழக்கிலங்கையைச்சேர்ந்த இளம் எழுத்தாளர் வை.சுந்தரராஜா ஆசிரியரின் தமிழர் சமுகஅமைப்பில் சான்றார் எனும் நாடார் வரலாறு நூல்ஒன்றும் இன்று வெளியாகவுள்ளது. இவர் காரைதீவு விபுலானந்த மத்தியகல்லூரியின் ஆசிரியராவார்.
