கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்டம் நாளை (20) செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24) வரை தவிசாளர் சந்திரதாச கலப்பதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதனடிப்படையில்;
நாளை (20) முதலமைச்சர் நஸீர் அஹமடினால் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2017ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டதுடன் குழுநிலை விவாதமும், முதலமைச்சுக்கான விவாதத்துடன் வாக்கொடுப்பும் இடம்பெறும்.
இதனைத்தொடர்ந்து அடுத்த நாளான(21) விவசாய அமைச்சர் துறைராசசிங்கமினால் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்> கால்நடை உற்பத்தி> கூட்டுறவு அபிவிருத்தி ஆகிய திணைக்களங்களுக்கான வரவு –செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பித்தபின்; குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.
ஏதிர்வரும் (23) கல்வி அமைச்சர் தாண்டாயுதபாணியினால் கல்விஇ தகவல் தொழில்நுட்பம் மற்றும் முன்பள்ளிக் கல்விஇ விளையாட்டு> பண்பாட்டலுவல்கள்> இளைஞர் விவகாரம்> புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான வரவு –செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பித்தபின் குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.
அன்றையதினம் மாலை சுகாதார அமைச்சர் முஹம்மட் நஸீரினால் சுகாதார> சுதேச வைத்திய> நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு> சமூக நலன்புரிச் சேவைகள்> கிராமிய மின்சார அமைச்சு தொடர்பான வரவு –செலவுத்திட்ட அறிக்கையும்>குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.
இறுதிநாளான (24)ஆம் திகதி வீதியபிவிருத்தி அமைச்சரினால் ஆரியாகலபதியினால் வீதி அபிவிருத்திஇ காணி அபிவிருத்தித்திறன் மற்றும் மனிதவலு அபிவிருத்திஇ மகளிர் விவகாரம்இ நீர்வழங்கல்; அமைச்சின் வீதி அபிவிருத்தித் திணைக்களம்இ காணி நிர்வாகத் திணைக்களம் ஆகியவற்றின் குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதுடன் அமைச்சுகளுக்கான வாக்கெடுப்புக்கள் நிறைவேறும்.
இதனைத்தொடர்ந்து மாகாணசபையின் தொகுப்பு உரையும் முதலமைச்சரின் தொகுப்பு உரையும் நடைபெறும். இறுதியில் வரவு -செலவுத்திட்ட விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
