அம்பாறையில் 20 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் - சுகாதார அமைச்சர் நஸீர்

அபு அலா -
லக நாடுகளுடன் ஒப்பீட்டளவில் எமது இலங்கை நாடு எயிட்ஸ் நோயில் தொற்றிலிருந்து பாதுப்பான நிலையிலுள்ளது. இலங்கையில் 647 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் அம்பாறையில் 20 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

இலங்கையை பொறுத்தமட்டடில், எயிட்ஸ் நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகள், மக்கள் மத்தியில் ஒரு உயர்வான இடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டடிக்காட்டினார்.

திருக்கோவிலில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற எயிட்ஸ் விழிப்பணர்வு பேரணியிலும், ஒன்றுகூடல் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,“இலங்கை ஒட்டு மொத்தமாக சுமார் 647 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாகவே தொற்றியுள்ளது.

இதில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் 20 பேர் ஏயிட்ஸ் நோய் தொற்றியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலாத் தலங்கள் காணப்படுகின்றமையால் நாம் விழிப்பாக வாழ வேண்டும். எனவே நாம் எல்லோரும் ஒரு தடவை இரத்தப் பரிசோதனைகளை செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -