ஜெயலலிதா மறைவால் பலியான 190 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி

ஜெயலலிதா மறைவால் பலியான மேலும் 190 பேருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அ.தி. மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு மண்ணுலகில் முடிந்தது என்ற துயர செய்தி வந்ததும் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ந்து போயினர். பேரன்பு கொண்டு அம்மாவை தங்கள் அன்புள்ள அம்மாவாக ஏற்று வாழ்ந்து வரும் கோடானு கோடி தொண்டர்களின் வேதனை சொல்லி மாளாது. அம்மாவின் மண்ணுலக வாழ்வு முடிந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தோரும், துயரம் தாளாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்றோரும் பல நூறுபேர். இதில் தற்போது மேலும் 190 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 16 பேரும், நீலகிரி மாவட்டத்தில் 3 பேரும், திருச்சி மாவட்டத்தில் 12 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 5 பேரும், கரூர் மாவட்டத்தில் 12 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 பேரும், நாகை மாவட்டத்தில் 4 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 4 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 பேரும் பலியானார்கள்.

மதுரை மாவட்டத்தில் 29 பேரும், தேனி மாவட்டத்தில் 15 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 18 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 14 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் 5 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 19 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேரும் பலியாகி உள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அ.தி. மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

அதேபோல் வி‌ஷம் அருந்தி தொடர் சிகிச்சை பெறும் 4 பேரின் மருத்துவ சிகிச்சைக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் கழகத்தின் சார்பில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -