ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் 4பேர் பலி

மும்பை: ஜுஹு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற அந்த தனியார் ஹெலிகாப்டரில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறால், மும்பையை அடுத்துள்ள கோரேகான் பகுதியையொட்டி ஆரே காலனி அருகேயுள்ள பில்டர் படா என்ற இடத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. விழுந்த சீக்கிரத்தில் அந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் விமானிகள் கேப்டன் பி.கே.மிஸ்ரா, கேப்டன் தேவேந்திர சிங் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று விபத்துக்குள்ளான அந்த ஹெலிகாப்டர் 1992-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ராபின்சன் R44 ஆஸ்ட்ரோ’ வகையை சேர்ந்ததாகும். முன்னர் பவன் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்த ஹெலிகாப்டரை, அமான் ஏவியேஷன் என்ற நிறுவனம் வாங்கி சீர்படுத்தி, ஜுஹு கடற்கரையை சுற்றுலா பயணிகளுக்கு சுற்றிக்காட்டும் பணிக்கு பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (மாம)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -