மு.கா இன் போராட்ட பயணத்தில் உடதலவின்ன படுகொலைக்கு இன்று 15 வருடங்கள். இன்னும் எத்தனையோ போராளிகள் தயார்நிலையில்!
கண்டி மாவட்டம் உடதலவின்ன பிரதேசத்தில் 2001.12.05 தேர்தல் தினமான நோன்பு பத்தொன்பதில் பன்னிரெண்டு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சுட்டு கொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனை அழிக்க முற்பட்டவர்களினால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய கொடூரமான கொலை சம்பவத்தில்இ உடதலவின்ன படுகொலை ஓர் முக்கியமானதாகும்.
தேர்தலுக்கான திகதி அறிவிப்பு செய்யப்பட்டதில் இருந்து கண்டி மாவட்டம் ஓர் போர்க்களமாக காட்சியளித்தது. ஹக்கீமை எப்படியும் தோல்வி அடைய செய்துஇ தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதில் அன்றைய சந்திரிக்கா அரசாங்கம் வரிந்துகட்டியது.
2௦௦1.௦5.௦2 இல் மாவனல்ல பிரதேசத்தில் சிங்கள காடயர்களினால் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனை தடுத்து நிறுத்தவோஇ முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கவோஇ நஷ்டஈடு வழங்கவோ அன்றைய சந்திரிக்காவின் அரசு முன்வரவில்லை.
இதன்காரணமாக அரசாங்கத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிக்காவின் ஆட்சியை கவிழ்த்துஇ தேர்தல் ஒன்றுக்கு வழிவகுத்தது. இதற்கு பழிவாங்கும் முகமாகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகஇ அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்த உட்பட பலரும் வரிந்துகட்டிக்கொண்டு களம் இறங்கினார்கள். இருந்தும் அவர்களது முயற்சிகள் தோல்வியடைந்ததனால்இ பன்னிரண்டு மு.கா போராளிகளை படுகொலை செய்ததன் மூலம் தங்களின் வெறியை தீர்த்துக்கொண்டார்கள்.
தான் போட்டியிடுகின்ற மாவட்டத்தில் சவால்களுக்கு மத்தியில் தேர்தல் பணிகளை முன்னெடுத்ததுடன்இ கட்சி தலைவர் என்பதனால் நாடு தழுவியரீதியில் தேர்தல் பிரச்சாரங்களில் பங்குகொள்ள வேண்டியிருந்தது. இதனால் இந்த தேர்தலில் பாரிய நெருக்கடிகளை தலைவர் ஹக்கீம் அவர்கள் எதிர்கொண்டிருந்தார்.
கண்டி மாவட்ட தேர்தல் பணிகளை முன்னெடுத்த தலைவர் ஹக்கீமின் சகோதரர் ஹசீர் அவர்களை கொலை செய்ய இலக்குவைத்தனர். அன்றைய தினம் உடுநுவர பிரதேசத்தில் காடையர் கூட்டமொன்று ஹசீர் அவர்கள் சென்ற வாகனத்துக்கு துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். வாகனத்தின் நாலு டயர்களும் சூட்டுக்குள்ளானதால் அதில் வந்த ஹசீர் உற்பட அனைவரும் வாகனத்தைவிட்டு வெளியேறி தப்பிச்சென்றார்கள். அத்துடன் உடுநுவர பிரதேசத்தில் இரண்டு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கொலை செய்யப்பட்டார்கள்.
இவ்வாறான பலவித அசம்பாவிதங்களுக்கு மத்தியில் வாக்கெடுப்புக்கள் முடிவடைந்து வாக்குப்பெட்டிகளை கண்டி கச்சேரிக்கு கொண்டு செல்வதற்காக மடவளயில் இருந்து பஸ்வண்டிகளில் ஏற்றப்பட்டன. பஸ்வண்டிகளை இடையில் மறித்து வாக்குப்பெட்டிகளை களவாடும் சூழ்நிலை காணப்பட்டதனால்இ வாக்கு பெட்டிகளை கண்காணிக்கும் பொருட்டு டொல்பின் வேன் ஒன்றில் பதின்மூன்று போராளிகள் பஸ்வண்டியினை பின்தொடர்ந்தார்கள். இவர்கள் சென்ற வாகனத்தில் இடநெருக்கடி காரனமாக ஒருவர் இடையில் இறங்கிவிட்டார்.
பன்னிரெண்டு போராளிகளுடன் வாகனம் வாக்கு பெட்டிகளை ஏற்றிய பஸ்வண்டியினை பின்தொடர்ந்தவாறு பயணிக்கிறது. ரமழான் மாதம் என்பதனால் நோன்பு நோற்ற நிலையில் நோன்பு திறக்கும் ஏற்பாட்டுடனேயே அவர்கள் சென்றார்கள். தாங்கள் நோற்ற நோன்பினை திறப்பதற்கு தங்களுக்கு அவகாசம் இருக்காது என்றும்இ இது தங்களது இறுதிப்பயணம் என்றும் அந்த போராளிகளால் ஊகித்திருக்க முடியாது.
வாக்குப்பெட்டியுடன் சென்ற பஸ்வண்டியினை பின்தொடர்ந்தவாறு சென்று கொண்டிருக்கையில்இ சிவில் உடையில் ஆயுதம் தரித்த சிங்கள காடையர்கள் சிலர் போராளிகளின் வாகனத்தினை பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்தார்கள். நிராயுதபாணிகளான இவர்கள் வாக்கு பெட்டியினைவிட தங்களது உயிர்களை காப்பாற்றவேண்டிய நிலைமைக்கு அப்போதைய சூழ்நிலை இருந்தது.
இந்த நிலைமையில் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு சாரதியினால் குறுக்குப்பாதையூடாக கண்டி கச்சேரியை அடைவதற்கு வாகனம் செலுத்தப்பட்டது. சன நடமாட்டம் இல்லாத அந்த பாதைஇ பின்தொடர்ந்துவந்த ஆயுததாரிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது.
போராளிகளின் வாகனத்தினை நோக்கி ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். அது வாகனத்தின் பின் கண்ணாடியினை ஊடறுத்து சாரதிக்கு அருகில் இருந்த ஒரு போராளியின் உடலை குண்டு துளைத்தது. இதனால் காயப்பட்ட போராளி சாரதியின் மடியில் சாய்ந்துஇ அவரது கால்பக்கத்தில் வீழ்ந்தார். இதனால் தொடர்ந்து வாகனத்தினை ஓட்டமுடியாமையினால் வாகனம் ஒரு மின் கம்பத்தில் மோதுண்டு நிறுத்தப்பட்டது.
பின்பு வாகனத்தினை சுற்றி வளைத்துக்கொண்ட ஆயுததாரிகள்இ தங்களது மனித வேட்டைக்கு இவ்வளவு இலகுவாக அகப்படுவார்கள் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை. வாகனத்துக்குள் இருந்த எவரும் தப்பிச்செல்ல முடியாத நிலைமை அங்கு காணப்பட்டது. பின்பு ஒவ்வொரு போராளியையும் அடித்து கொடுமைப்படுத்திவிட்டு வாகனத்தில் இருந்து வெளியே எடுத்து தங்களது துப்பாக்கியால் ஒவ்வொருவராக சுட்டார்கள். அதில் அஸ்வர் என்னும் போராளியின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து சுட்டதில் அவரது தலையின் பின்பக்கம் சிதறியது.
அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதனை உறுதிப்படுத்தியபின்பு வாகனத்துக்குள் வெடிகுண்டினை பொருத்திவிட்டு கொலைகாரர்கள் அவ்விடத்திலிருந்து தப்பிச்சென்றார்கள். இந்த சம்பவம் நடைபெறும்போது மாலை ஐந்து மணியாகும்.
இன்று இருப்பதுபோன்று நடமாடும் தொலைபேசி பாவனைகள் அன்று இல்லாததனால்இ இந்த சம்பவம் பற்றிய செய்தி உடனடியாக வெளியே தெரிந்திருக்கவில்லை.
பின்பு இரவு பத்து மணிக்கே பொலிசாருடன் சென்று கொலைசெய்யப்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. அதிஷ்டவசமாக வாகனத்தின் சாரதி நளீம் உற்பட இரண்டு பேர்கள் படுகாயத்துடன் உயிர் தப்பினார்கள். ஏனைய பத்து பேர்களும் சஹீதானார்கள். அன்றைய தினம் உடுநுவர பிரதேசத்தில் இரண்டுபேரும் உடதலவின்னவில் பத்துபேர்கள் என மொத்தமாக பன்னிரெண்டு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சஹீதானார்கள்.
பைசால்இ அஸ்வர்இ மிர்சான்இ ரிஸ்வான்இ நஸ்மிஇ சபாஇ நசார்இ பசீல்இ மொகிதீன்இ மொகமத் ரிஸ்வான்இ ஹம்மாத்இ சியாத் போன்ற போராளிகளே சிங்கள காடையர்களால் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டவர்களாவார்கள்.
இந்த சம்பவத்தின் பிரதான கொலை சந்தேக நபர்களாக அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தவும்இ அவரது புதல்வர்களான லொகான் ரத்வத்தஇ சாணுக ரத்வத்த ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்கள்தான் கொலையாளிகள் என்ற ஆதாரங்கள் இருந்தும்இ இறுதியில் இம்மூவரும் நிரபராதிகள் என்று நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் இந்த சம்பவம் ஓர் வரலாற்று துன்பகரமான நிகழ்வாகும். முஸ்லிம் காங்கிரசை அழிக்க அவ்வப்போது ஒவ்வொரு சக்திகள் முயற்சிப்பதும்இ இறுதியில் போராளிகளின் தியாகங்களினால் அவர்களே அழிந்ததும்தான் வரலாறு. இவ்வாறு இக்கட்சியையும்இ தலைமையையும் பாதுகாக்க இன்னும் எத்தனையோ போராளிகள் தங்களை அர்ப்பணிக்க தயாராக இருக்கின்ற நிலையில்இ யாராலும் இக்கட்சியினை அழித்துவிட முடியாது. முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியில் இந்த போராளிகளின் தியாகம் என்றுமே மறக்க முடியாத ஓர் வரலாற்று தடயமாகும்.