இப்பாகமுவ, கொக்கரெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியால் சென்று கொண்டிருந்த பஸ்வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரத்தில் இருந்து குருநாகல் நோக்கி குறித்த பஸ் வண்டி பயணித்துள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் கொக்ரெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொக்கரெல்லை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.