அப்துல்சலாம் யாசீம்-
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நல்லூர் பகுதியில் கடந்த 2012-02-11ம் திகதி 14வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குற்படுத்தியவருக்கு 14வருடமும் 06மாத கடூழிய சிறை தண்டனையும் வழங்குமாறு இன்று (01) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதவான் ஏ.பிரேமசங்கர் உத்தரவிட்டார்.
இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டவர் தோப்பூர்.நல்லூர் பகுதியைச்சேர்ந்த சுப்பரமணியம் கேதீஸ்வரன் (31வயது) எனவும் தெரிவருகின்றது.
குறித்த நபர் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்தவர் எனவும் திருமணமான நிலையில் நல்லூர் பகுதிக்கு வருகை தந்து 14 வயதில் சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அதனையடுத்து பொலிஸ் அவசர தொலைபேசிக்கு அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறைப்பாட்டையடுத்து விசாரணை செய்த சம்பூர் பொலிஸார் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தாக்கல செய்தனர்.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரண்டு குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபருக்கு விதிக்கப்பட்டது. முதலாவது பெற்றோர்களின் விருப்பமின்றி சிறுமயை அழைத்துச்சென்றமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை எனவும் 01வது குற்றத்திற்காக 02 வருட சிறை தண்டனை 02வது குற்றத்திற்காக 10 வருடம் சிறை தண்டனையும் இதை விடவும் ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்தாவிட்டால் 06 மாத சிறை தண்டனை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்தாத பட்ஷத்தில் இரண்டு வருடம் சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதவான் ஏ.பிரேமசங்கர் உத்தரவிட்டார்.