காரைதீவு நிருபர்-
எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் க.பொ.த. சா.தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பல மாணவர்க்கு இன்னும் தேசியஅடையாள அட்டை கிடைக்கவில்லையென்று புகார் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பிரஸ்தாப மாணவர்களுக்கு இன்னும் பரீட்சைக்கு 4 தினங்கள் இருக்கையில் அது கிடையாமலிருப்பது உளரீதியான கவலையை அளித்துள்ளதாகக்கூறுகின்றனர்.
சக மாணவர்களுக்குக் கிடைத்து தமது பிள்ளைகளுக்கு கிடையாமலிருப்பது மனஉழைச்சலைக் கொடுத்துள்ளதாக பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் மட்டக்களப்பிலுள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்திடம் தொடர்புகொண்டுகேட்டபோது குறிப்பிட்ட சில மாணவர்க்கு கடந்த 28ஆம் திகதி கொழும்பிலிருந்து தபாலிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் விண்ணப்பங்களில் சில குறைபாடுகளுள்ளோருக்கும் தாமத் காட்டப்படுகின்றது என்றார்.
அடையாளஅட்டை இதுவரை கிடைக்கப்பபெறாத மாணவர்களுக்கு அதிபரிடம் தே.அ.அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டு தனித்தனி கடிதம் வழங்கி வருகின்;றோம்.அதனைக்காட்டி பரீட்சைக்குத் தாராளமாகத் தோற்றலாம் எனவும் கூறினார்.
அப்படியெனின் கொழும்பிலிருந்து கல்முனைக்கு தபால்வந்துசேர 05தினங்களா என்ற கேள்வியும் எழுகின்றது. ஆட்பதிவுத்திணைக்களம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?
