எம்.ரீ.ஹைதர் அலி-
காத்தான்குடி SP வீதியில் கழிவு நீர் செல்லுகின்ற குழாய்களுக்குள் அடைப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக கழிவு நீர் நிரம்பி வழிந்து SP வீதி மற்றும் அஜந்தா வீதி என்பன கழிவு நீர் தேங்கி காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு, இவ்வீதியால் பயணிப்பவர்கள் மிகவும் அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.
(2016.11.08ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை) குறித்த வீதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் நிலைமையினை நேரில் பார்வையிட்டதோடு, நகரசபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரை உடனடியாக தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு இப்பிரச்சினையினை நிவர்த்தி செய்வதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



