”சம்மாந்துறை வைத்தியசாலை நூலகத்திற்கு மருத்துவ நூல்கள் அன்பளிப்பு”

அஸ்லம் எஸ்.மௌலானா-
ம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் நூலகத்திற்கு ஆசியா பவுண்டேஷன் ஒரு தொகுதி மருத்துவ நூல்களை அன்பளிப்பு செய்துள்ளது. இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இவ்வைத்தியசாலையில் நடைபெற்றபோது ஆசியா பவுண்டேஷன் சார்பில் அதன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் கலந்து கொண்டு, வைத்திய அத்தியட்சகர் டாகடர் வை.பி.எம்.அப்துல் அஸீஸ் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாகடர் ஏ.டபள்யூ.எம்.சமீம் ஆகியோரிடம் கையளித்தார். 

மிகவும் பெறுமதியான இந்நூல்கள் வைத்தியர்களின் மருத்துவ அறிவு விருத்திக்கும் தேடலுக்கும் பெரிதும் உதவும் என்பதுடன் அறுவைச் சிகிச்சை கூறுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்த வைத்திய அத்தியட்சகர் டாகடர் வை.பி.எம்.அப்துல் அஸீஸ், இதற்காக ஆசியா பவுண்டேஷன் அதிகாரிகளுக்கு வைத்தியசாலை சமூகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

அறுவைச் சிகிச்சை நிபுணர் டாகடர் எம்.ஏ.எம்.சமீம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இம்மருத்துவ நூல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் மேலும் தேவையான நூல்களை பெற்றுக் கொடுப்பதற்கு ஆசியா பவுண்டேஷன் தயாராக இருப்பதாகவும் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனைக்கும் ஒரு தொகுதி மருத்துவ நூல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -