இனவாதி தயாகமகவை உருவாக்கியது முஸ்லிம் தரகர்களே - சபீஸ்

மூவின மக்களும் சமமாக வாழும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவுள்ள தயாகமகே புத்தர் சிலை எங்கும் வைக்கப்படலாம் ஆனால் அகற்ற முடியாது என பேசியிருப்பது மிலேச்சத்தனமான செயலாகும்.

பல பாராளுமன்ற தேர்தல்களில் அம்பாறைமக்களால் தோற்கடிக்கப்பட்ட இனவாதி தயாகமகே கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மக்கள் குறைந்தளவிலான வாக்குகளை அழித்திருந்தும் முஸ்லிம்மக்கள் சுமார் 20000 வாக்குகளை வாரிவழங்கி இனவாதியை வெற்றி பெறவைத்தனர்.

இதற்கு காரணம் இனவாதி கமகே முஸ்லிம் மக்களுக்கு செய்த சேவைகள் கிடையாது மாறாக பணத்துக்கும் சாராயத்துக்கும் அடிமைப்பட்ட முஸ்லிம் தரகர்கள் ஏழ்மையில் வாழ்ந்த எமது மக்களை ஏமாற்றி வெறும் 500 ரூபாயை கொடுத்து அவர்களின் வாக்குரிமையை அபகரித்து எமது மக்களின் உரிமைகளை துரோகியின் காலடியில் கொண்டுபோய் சேர்த்தனர்

முற்போக்கு சிந்தனை கொண்டு சிந்திப்பதற்கு தயாரில்லாத நமது மக்களில் ஒரு குழுவினர் 500 ரூபாய் கொண்டு ஏதோ உலகத்தை வாங்கிவிடலாம் என்று நினைத்து 6 வருட எமது சமூக உரிமையை இனவாதிக்கு தாரைவார்து விட்டனர் நாம் தயகமகவை விட நமது மக்களைத்தான் நொந்துகொள்ளவேண்டும்.

கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான பகுதிகள் தீகவாபிக்கு சொந்தமானது என கூறியுள்ள இனவாதி துரோகி தயாகமகேவுக்கு பதில் சொல்ல,

காலம் மாறும் பொறுத்திருப்போம் தரகர்களுக்கு வாழ்வு வரம் கொடுக்கவும் காத்திருப்போம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -