கொட்டாஞ்சேனையில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் வெலிசர முகாமிலுள்ள கடற்படை புலனாய்வு அதிகாரிகள் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளனர் என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணை அறிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இன்று சமர்ப்பித்த போதே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்ச்சேனையில் இருந்து வெல்லம்பிட்டி நோக்கி தமது வேனில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயணிக்கும் ரத்னசாமி பரமானத்தன் மற்றும் வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.
இதேவேளை காணாமல் போனதாக கூறப்படும் இரு இளைஞர்கள் யங்கரவாத தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடந்த விசாரணையின் போது குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.