அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. குச்சவெளி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் தந்தைக்கு மகன் பொல்லால் தாக்கியதுடன் மகனை தந்தை இரும்புக்கம்பியால் தாக்கிய நிலையில் தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு (01) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் நிலாவெளி. வாழையூற்று பகுதியைச்சேர்ந்த தந்தையான எம்.எஸ்.அப்துல் ஹஸன் (50 வயது) மற்றும் அவரது மகனான முகம்மட் நவ்பர் (20வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினாலேயே இவ்வணர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கைகலப்பு தொடர்பாக குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.