மோசடி செய்ததால் - இலங்கை பெண்ணுக்கு கனடாவில் ஐந்து வருட சிறை

கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கை பெண்ணொவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜயவத்த பெரேரா என்ற 40 வயதான பெண்ணுக்கு எதிராக டொரண்டோ நீதிமன்றம் இந்த தீர்ப்பை விதித்துள்ளது. குறித்த பெண், முதலீட்டாளர்களுக்கு அதிக பங்கு லாபம் பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் 2004 இல் இருந்து 2014 வரையான காலப்பகுதியில் 52 போலி திட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் ,அங்கு சில பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. 60 முதலீட்டாளர்களிடம் இருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை மோசடி செய்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பணத்தை வைத்துக் கொண்டு அந்த பெண் ஆடம்பர வீடுகள் மற்றும் ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்ததுடன் மிகப் பெரிய பெண் தொழிலதிபராவும் செயற்பட்டுள்ளார். இதேவேளை, ஜயவத்த பெரேரா தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -