மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் வெல்லவாய நகர மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செலுத்த வேண்டிய பணம் தற்போது வரையில் செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள எரிபொருளுக்கான பணம் இதுவரையில் செலுப்படவில்லை.
அதற்கமைய 170,000 பணம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.
இந்த பணத்தை செலுத்தாமையின் காரணமாக ஜனாதிபதி செயலக மோட்டார் வாகனத்திற்காக அந்த எரிபொருள் நிலையத்தில் கொடுப்பனவு அடிப்படையில் எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.