எம்.எஸ்.எம். ஸாகிர்-
இலங்கை கரவாகு இலக்கியச் சந்தி வழங்கவிருக்கும் கவிதைக்கான சோலைக்கிளி விருது- 2015 இற்கு உலகளாவிய ரீதியில் தமிழ் பேசும் கவிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட உலகில்
எப்பாகத்தில் இருக்கும் தமிழ்க் கவிஞர்களும் இப் போட்டியில் பங்கு பற்றலாம். வயதெல்லை கிடையாது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை வெளியிடப்பட்ட கவிதை நூல்களில் இருந்து இரண்டு பிரதிகளை கவிஞர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
புலமை வாய்ந்த நடுவர்களால் பரிசீலிக்கப்பட்டு தெரிவு செய்யப்படும் ஒரு கவிதை நூலுக்கு 2015 இற்கான சோலைக் கிளி விருதும், 15,000 ரூபாய் பணப் பரிசும், சான்றிதழும் வழங்கி வைக்கப்படும்.
மேலும், போட்டிக்கென அனுப்பப்படும் சிறப்பான ஐந்து கவிதை நூல்களுக்கு ஆறுதல் பரிசாக விசேட சான்றிதழும், 2000 ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்படவிருக்கின்றன. இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் இறுதிப் பகுதியில் கவிதைக்கான சோலைக் கிளி விருது விழா நடைபெறவுள்ளது.
எனவே, கவிஞர்கள் இம்மாதம் (நவம்பர்) 28 ஆம் திகதிக்கு முதல் தங்கள் முழு விபரங்களுடன் இரண்டு கவிதை நூல்களை அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய தபால் முகவரி,
நிறுவுனர், கரவாகு கலை இலக்கிய மன்றம், இல.61, லெனின் வீதி, மாளிகைக்காடு மேற்கு, காரைதீவு, இலங்கை.
தொடர்புகளுக்கு- 094774073361