முன்னளர் அமைச்சர் விமல் வீரவன்ச, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட 17 பேருக்கு பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் உறுப்பினர்கள், தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் காணப்படும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று கோடி ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு வழங்கக்கூடிய எவ்வித தகுதியும் அற்றவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியமை குறித்து முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியதனால் அரசாங்கத்திற்கு நான்கு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்ச, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.