ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலசவ உம்ரா திட்டத்தின், 100 பேர் அடங்கிய 5ஆவதும் இறுதியுமான குழு நாளை வியாழக்கிழமை புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளது.
ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் ‘மட்டக்களப்பு கெம்பஸ்’ பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர், இக்குழுவை வழியனுப்பி வைக்கவுள்ளனர்.
நாடாளாவிய ரீதியில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன், பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள் மற்றும் கதீப்மார்களை கௌரவிக்கும் நோக்குடன் இலவச உம்ரா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதற்கமைய, 55 வயதை பூர்த்தி செய்த, இதுவரைக்காலம் ஹஜ் அல்லது உம்ரா கடமையினை நிறைவேற்றாத இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் 500 பேர் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் கட்டம் கட்டமாக உம்ரா கடமைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இறுதிக்குழு நாளை வியாழக்கிழமை மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.