ஐபோன் கடைக்குள் நுழைந்து கோபத்துடன் புது ஐபோன்களை அடித்து நொறுக்கிய நபர் VIDEO

ரோப்பிய வாடிக்கையாளர்களின் உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஃப்ரெஞ்சு நபர் ஒருவர் பாரீஸில் டிஜோன் நகரத்தில் இருந்த ஐபோன் கடைக்குள் நுழைந்து தன்னிடமிருந்த இரும்பு பந்தால் கோபத்துடன் புது ஐபோன்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், கருப்பு கண்ணாடியை அணிந்த மனிதர் ஒருவர் ஃப்ரெஞ்சு விளையாட்டில் பயன்படுத்தப்படும் இரும்பு பந்தோடு, டிஜோன் நகரில் இருந்த ஆப்பிள் மொபைல் கடைக்குள் நுழைந்தார். அங்கே காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஐபோன்களை எடுத்து மேசை மீது வைத்தவர், கையில் இருந்த பந்தால் மொபைலை அடித்து டிஸ்ப்ளேவை அழிக்க ஆரம்பித்தார். இதேபோல அங்கிருந்த மற்ற ஐபோன்களின் டிஸ்ப்ளேக்களையும் அவர் உடைத்தார்.

இந்த வீடியோவை கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் வீடியோவாக எடுக்க ஆரம்பித்தார். வீடியோ எடுப்பதைத் தெரிந்துகொண்ட மனிதர், கேமராவுக்கு முன்னால் நின்று ஐபோன்களை அழிப்பதற்கான காரணத்தைக் கூற ஆரம்பித்தார்.

”ஆப்பிள் நிறுவனம், ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் உரிமைகளை மீறுகிறது. அவர்களிடம் என்னுடைய பணத்தைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். இப்போது இதுதான் அவர்களுக்கான என்னுடைய பதில்!” என்று கத்திக்கொண்டே தன்னுடைய இரும்பு பந்தைக் கொண்டு மற்றொரு ஐபோனையும் உடைத்துவிட்டார்.

காவலர் வந்து அவரைத் தடுப்பதற்குள் கடையில் இருந்த 12 ஐபோன்களையும், 1 மேக்புக்கையும் அவர் அடித்து நொறுக்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -