தகவல் அறியும் உரிமைச் சட்டம் யாருக்காக..? எதற்காக..?

எம்.ஐ.நெளசாத் -
லங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு சீர்திருத்தின் பயனாக பொதுமக்கள், சமூகமட்ட அமைப்புக்கள், துறைசார் நிறுவனங்கள் ஆகியன இணைந்து அரசிற்கு கொடுத்துவந்த ஒத்துழைப்பு மற்றும் பரிந்துரைப்புகளுக்கு அமைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை அரசானது அமுல்ப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இது பற்றிய மக்கள் தெளிவுறுத்தல் கலந்துரையாடல் 18.10.2016ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் IWPR நிறுவனத்தின் திட்டமுகாமையாளரும் சட்டத்தரணியுமான ஜனாப். முகம்மது அசாட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வினை உத்தியேதக பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் வரவேற்புரையினை மட்டக்களப்பு மாவட்ட இணையத்தின் தலைவர் திரு. எஸ்.சிவயோகநாதன் அவர்கள் நிகழ்த்தியதுடன் தொடர்ச்சியாக பிரதம அதிதி உரையினை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி: பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. 

இதன்போது மாவட்ட செயலாளர் கூறுகையில் கச்சேரியினுடைய சேவைகள் மக்களுக்காக இருக்கின்றது. வெளிப்பாட்டுத்தன்மையுடன் செயற்பட்டு வருகின்றோம். அத்துடன் குறிப்பாக திட்ட அமுலாக்கங்களின் போது மாவட்ட செயலாளர் என்ற வகையில் தான் தனித்து எந்தவொரு முடிவும் எடுப்பதில்லை எனவும், அனைவரது பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் மேற்கொண்டே தீர்மானம் எடுக்கப்படும் எனவும், தனக்கு எதிரான புரழ்வான தகவல்களை தெரிவிக்காமல் நேரடியாக தனக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் இச்சட்டத்தின் வருகை மக்களிற்கு பயனுள்ள வகையில் அமையும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது வளவாளர் சட்டத்தரணி திரு.ஜெகத் லியனகே ஆராச்சி அவர்களினால் தகவல் அறியும் சட்டம் என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் எவை? இதனை பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் இதிலிருந்தான வெளிப்பாடுகள் அத்துடன் பொறுப்புக் கூறும் தன்மைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி: பி.எஸ்.எம் சார்ள்ஸ், சிறப்பு அதிதியாக டபிள்யு.ஜே. யாகொட ஆராச்சி, வளவாளர்களாக சட்டத்தரணி திரு. ஜெகத் லியனகே ஆராச்சி, ஊடகப் பொதுச் செயலாளர் திரு. தர்மசிறி, மட்டு மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் உட்பட கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், மட்டுமாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்கள், இதர அம்பாறை – மட்டு மாவட்ட தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

இப்பிராந்தியமட்ட நிகழ்வில் கலந்து கொண்டு இச்சட்டத்தின் அறிமுகம் தொடர்பாகவும் இதிலிருந்தான சந்தேகங்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு அதற்குரிய தெளிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும் இந்நிகழ்வினை IWPR நிறுவனத்தின் நிதியுதவியுடன் RDPO – Srilanka, ESDF, YMMA – Trincomalee , மட்டக்களப்பு மாவட்ட இணையம், கிழக்கு பிராந்திய ஊடகக் குழு ஆகிய அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -