ஏ.எம்.றிகாஸ்-
சர்வதேச சிறுவர்தினம் மற்றும் முதியோர் வாரத்தையொட்டி மட்டக்களப்பு- ஏறாவூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரதேச செயலாளர் எஸ்எல்எம் ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் மீரா முதியோர் சங்கப்பிரதிநிதிகள் நகர சபையின் செயலாளர் எம்எச்எம் ஹமீம் மற்றும் செயலக உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.
பிரதேச செயலக முன்றலில் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பான இந்நிகழ்வில் சிறுவர் தின கொடிவிற்பனையும் நடைபெற்றது. முதலாம் கொடி பிரதேச செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆரம்பமான நடைபவணி பதாதைகளை தாங்கியவண்ணம் சுமார் ஐந்நூறு மீற்றர் தூரத்தைக்கடந்து பொது விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.
சிறுவர்களது உரிமைகள் மற்றும் முதியோரது நலன்களை வலியுறுத்தி இந்நிகழ்வுகள் நடைபெற்றதாக பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்எச். சபுஸ்பேகம் தெரிவித்தார்.