எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட மத்தியமுகாம் சாளம்பைக்கேணி-04 கிராமத்தில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் பிந்தங்கிய கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 8.5 மில்லயன் ரூபாய் செலவில் 5 வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுக்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் அல்-அமான சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஏ.வீ.நபாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாளம்பைக்கேணி மத்திய குழுத் தலைவர் எம்.எச்.மஹ்ரூப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சவளக்கடை மத்திய குழுத் தலைவர் ஏ.அஸீஸ், சவளக்கடை, சாளம்பைகேணி மத்திய குழுக்களின் செயலாளர்களான மீரா ஹாஜியார், ஏ.எல்.ஜலீல், கிராம அபிவிருத்தி சங்களின் பிரதிநிகள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அயராத முயற்சியினால் பெறப்பட்ட இவ் வேலைத்திட்டத்தில் வைத்தியர் வீதியும் வடிகானும், ஹிஜ்ரா வீதி, சாஹிரா பலர் பாடசாலை 1ஆம் குறுக்கு வீதி, சாஹிரா பலர் பாடசாலை 3ஆம் குறுக்கு வீதி மற்றும் பல்தேவைக் கட்டிடம் ஆகிய 5வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.