சம்மாந்துறை பத்ரகாளியம்பாளின் தீமிதிப்பு வைபவம்..!

காரைதீவு நிருபர் சகா-
ம்மாந்துறையில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற வரலாற்றுப்பிரசித்திபெற்ற பத்ரகாளியம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

800 ஆண்பெண் தேவாதிகள் ஆலய பிரதமபூசகர் மா.சதாசிவம் தர்மகர்த்தா எஸ்.சுப்பிரமணியம் முன்னிலையில் தீமிதிப்பிலீடுபட்டனர்.

காலையில் தாமரைத்தடாகத்தில் மஞ்சள்குளித்து பின் தீமிதிப்பிலீடுபட்டனர். பலருக்கு சாட்டையடியும் வழங்கப்பட்டது.

அரோகரா கோசம் முழங்க தீமிதிப்பு வைபவம் வெகுசிறப்பாக இடம்பெற்றது. வெளிநாட்டிலிருந்தும் பல பக்தர்கள் வந்து தீமிதிப்பிலீடுபட்டனர். இப்பிரதேசத்தில் இனமுரண்பாடுகளுக்கு முன்பு பல நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. முரண்பாடுகளுக்குப்பிற்பாடு அவர்கள் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு காரைதீவு மற்றும் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் யாரும் இன்னும் பழைய இடங்களுக்குத் திரும்பவில்லை. எனினும் இவ்வாலய பூஜைகள் உற்சவங்கள் திருவிழாக்கள் தீமிதிப்புவைபவங்கள் வழமைப்பிரகாரம் நடைபெற்றுவருகின்றன.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -