அஷ்ரப் ஏ சமத்-
நாட்டின் பல பகுதிகளிலும் நிலவுகின்ற கடும் வறட்சியை கவனத்திற் கொண்டு, எதிர்வரும் ஐந்தாண்டு காலத்திற்கான மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை நகர திட்டமிடல், நீர்வழங்கள் அமைச்சரும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
மெராட்டுவை அங்குலானையில் அமைந்துள்ள நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் மேற்கு மற்றும் தெற்கு பிரதேசத்துக்கான உபகாரசேவைகள் மத்திய நிலையத்தில் திங்கட் கிழமை (3) முற்பகல் இடம்பெற்ற பிரஸ்தாப சபையின் நாட்டின் எல்லா பகுதிகளையும் சேர்ந்த பிராந்திய பொறியியலாளர்கள் மற்றும் முகாமைத்துவ உயரதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் நீர் விநியோக நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு வாய்ப்பான விதத்தில் நீர் ஊற்றுக்களோடும், நீர்ச்சுனைகளோடும் கூடிய பாரிய நீரேந்து பிரதேசங்களை உள்ளடக்கிய நீர்த்தேக்கங்களை அமைக்க வேண்டியதன் அவசியமும், நீர் பற்றாக்குறையை நீக்குவதற்கு கடல்நீரை சுத்திகரித்து பாவனையாளர்களுக்கு வழங்குவதன் தேவைப்பாடும், மாரிகாலத்தில் மழைநீரை சேகரித்து வைத்து கோடைகாலத்தில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் பெரிதும் உணரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.
அத்துடன் எந்தவொரு உற்பத்திப் பொருளை அல்லது இயந்திரத்தை தயாரிப்பதற்கு எந்தளவு நீர் பாவனை தேவைப்படுகின்றது என்பதை கணித்து அவற்றுக்கான செலவீனத்தை மதிப்பீடு செய்து அறவிடுவதற்கு கார்பன் அடையாள பதிவு (ஊயசடிழn குழழவ Pசiவெ) என்ற செயல்திட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும், அதுபற்றி மக்களுக்கு போதியளவு அறிவுறுத்தப்பட வேண்டுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் நீர்விநியோக நிர்மாணங்களின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை, அனுமதி கோரல், அதற்காக பாரிய நஷ்டத் தொகையை வழங்கவேண்டியுள்ளது. அதற்காக ஒரு உபகுழுவை அமைத்தல், அத்துடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் வீடமைப்புக்கிராமங்கள், இயற்கை அனர்த்தஙகளினால் சேதமுறும் வீட்டுத்திடடங்கள், மீள்குடியேற்ற அமைச்சின குடியிருப்புத் திட்டங்களுக்கு நீரை வழங்குவதற்கு முன்கூட்டியே உரிய திட்டம் பற்றி கலந்துரையாடி அனுமதி பெறல் போன்ற பிரச்சினைகளும் இங்கு ஆராயப்பட்டது.
அங்கு உரையாற்றிய நீர்வழங்கள், வடிகாலமைப்பின் பிரதி முகாமையாளர் ஜீ.ஏ. குமார ரத்ன, 2020ம் ஆண்டில் ஏற்படக்கூடிய நீர்த்தேவையை சரியாக மதிப்பீடு செய்து அதுபற்றி தீர்மானிக்க வேண்டி இருப்பதாகவும், அதனை எதிர்கொள்வதற்காக 42 பில்லியன் ரூபா நிதி அவசியப்படுவதாகவும் அத்தொகையில் 4 பில்லியன் ரூபாக்களை 2017ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இலங்கையில் வாழ் சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக நீர்விநியோக வடிகலாமைப்புச் சபையினால் 11 பிராந்தியங்களில் 274 குடிநீர்; பாரிய 'பிலான்ட்கள்' பரமாரிக்கப்பட்டு வருகின்றன. நீர்விநியோக வடிகாலமைப்புச் சபையினால் 2015ஆம் ஆண்டு புதிய நீர் இணைப்புக்ள் 907,000 வழங்கப்பட்டுள்ளன. 2016ல் ஜீன் மாதம் வரை மட்டும் 2,025,048 புதிய நீர் இணைப்புக்ள்; வழங்கப்பட்டுள்ளன. எதிர்கலத்தில் வீடுகளுக்கு குடி நீர் இணைப்புக்காக இத் தொகை இரட்டிப்பாக அதிகரிப்படும். அதற்காக முன்கூட்டியே நீர் விநியோக வடிகலாமைப்புச் சபை குடிநீர்திட்டங்களை உருவாக்குதல் வேண்டும்.
இந்த நிகழ்வில் நீர்வழங்கள், வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ. அன்சார், உப தலைவர் ஷபீக் ரஜாப்டீன், செயலாற்று பணிப்பாளர் மஹிலால் டி சில்வா ஆகியோர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் பங்குபற்றினர். வடகிழக்கு உட்பட நாட்டின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருந்த முகாமைத்துவ தரத்திலான பொறியியலாளர்கள் தத்ததமது பகுதிகளில் நிலவும் குறைபாடுகளை சுட்டிகாட்டியபோது, அமைச்சர் ஹக்கீம் அவற்றை உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.