கிழக்கு மாகாண கல்வி அமைச்சரை பெற்றோர்கள் சந்திப்பு..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நிவர்தித்து தருவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி இன்று (19) அவரது அலுவலகத்தில் பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக பெற்றோர்களுடனான கலந்துறையாடலில் தெரிவித்தார்.

அனுராதபுர மாவட்ட எல்லைக்கிராமமான ரொட்டவெவ கிராமம் கோமரங்கடவல வடக்கு கல்வி வலயத்திற்குள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தமிழ் மொழி மூல பாடசாலைகள் நான்கு காணப்படுவதாகவும் அதில் அதிகளவில் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையாக ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயம் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் கல்வி அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இப்பாடசாலைக்கு 18 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 08 ஆசிரியர்கள் தற்போது கடமையில் உள்ளதாகவும் இன்னும் 10 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் கல்வி அமைச்சரிடம் தெரிவித்ததுடன் வடக்கு கல்வி வலயத்தில் மாணவர்கள் குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகளில் ஆசிரியர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பெற்றோர் குறைபாடான ஆசிரியர்களை நியமித்து தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சரில் ரொட்டவெவ பெற்றோர்களின் கலந்துறையாடலின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.ரம்ழான் ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆப்பள்ளி வாசல் தலைவர் மௌலவி அப்துல்சத்தார்- அப்பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.பசீர்தீன் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -