இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஆர்யா , ஷாம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ''புறம்போக்கு''. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான வர்ஷன் உலகத் தமிழர்கள் தீபாவளியை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாளில் இலங்கை தமிழர்களுக்கு தமிழ் சினிமாவில் தான் வாய்ப்பளிக்க விரும்புவதாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை தனது முகநூலில் அறிவித்துள்ளார்.
அவர் அது பற்றி கூறும் போது ''கடந்த 10 வருடங்களாக இலங்கை தமிழர்கள் வாழும் பல நாடுகளில் அவர்கள் ஏற்பாடு செய்த பல இசைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். எனவே அவர்களுக்கு செய்யும் நன்றி கடனாக எனது புதிய திரைப்படத்தில் ஒரு பாடகர் மற்றும் பாடகிக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறேன். உலகின் எப்பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர்களாக இருந்தாலும் என்னை தொடர்புகொள்ளுங்கள்'' என அறிவித்துள்ளார்.
எனவே, நன்றாக பாடும் திறமை மிக்க இலங்கை பாடகர்கள் இந்த அரிதான வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பாடல்கள் மற்றும் விபரங்களை sathishvarshanmusic@gmail.com என்ற இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்.
பாடலாசிரியர் அஸ்மின்.